விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை தொடங்கியது.!
சென்னை பனையூரிலுள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், 234 தொகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்னும் சற்று விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
அரசியல் பயணம் நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய், தனது பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களை சந்திக்கிறார். தற்போது அதற்காக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்தடைந்தார்.
இன்னும் சற்று நேரத்தில் அலோசனை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில், மக்கள் பிரச்சனை குருதி ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்துகிறாராம். இதற்கிடையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகள் காலையில் இருந்தே விஜய்க்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வருகை தந்துள்ள 234 தொகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறுசுவை மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், சாம்பார், காரகுழம்பு, ரசம் மற்றும் மோருடன் வழங்கப்பட்டு வருகிறது.
அண்மையில், 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.