அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்து சீட்டு வழங்க கோரிய வழக்கு – மருத்துவத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு…!
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின் மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்க கோரிய வழக்கில் மருத்துவத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பின் மாத்திரை மருந்துகளுக்கு உரிய மருத்துவ சீட்டு வழங்க கோரி சிந்துஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உட்பட மருத்துவ அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சிந்துஜா என்பவர் மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக ரூ. லட்சம் வழங்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.