தமிழ்நாட்டில் தக்காளினா…கேரளாவில் அரிசி விலை உயர்வால் மக்கள் அவதி.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவது போல், கேரளாவில் அரிசியின் விலை பொதுச்சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
மட்டா வடி அரிசி கிலோ ரூ.46ல் இருந்து ரூ.54 ஆகவும், சுரேகா அரிசி ரூ.38ல் இருந்து ரூ.48 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஓணத்தின் போது விலை ரூ.60ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. அரசு சந்தையில் ஜெயா அரிசி விலை குறைவால், பொது சந்தையில் டூப்ளிகேட் அரிசி விலை ரூ.34 ஆக குறைந்துள்ளது
மேலும், குருவா ரூ.38-48 ஆகவும் சோனா மசூரி ரூ.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கடும் விலையேற்றத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.