தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!

MKStain MeetingIASIPS

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சட்டம் மற்றும் ஒழுங்குநிலை குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், சிறைத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் முதல்வருடன் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் டிஐஜி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும், காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் தமிழகத்தின் குற்றங்கள் எவ்வாறு தடுக்கப்படவேண்டும் என்பது பற்றியும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்