தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! எந்தெந்த சேவைக்கு எவ்வளவு உயர்வு.?

Pathirapathivu service tax

பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பத்திரப்பதிவு துறை மூலம் செயல்படுத்தப்படும் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணமானது கடந்த 20 ஆண்டுகளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்தன. அந்த சேவை கட்டணமானது தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருமான ஜோதி நிர்மலா வெளியிட்டு இருந்தார்.

  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய கட்டணங்கள் பற்றிய விவரங்கள் வெளியாக இருந்தன.
  • ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ஆனது 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • குடும்பம் உறுப்பினர்களுக்கு இடையிலான பாகப்பிரிவினை, விடுதலை உள்ளிட்ட ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயாக இருந்தது. தற்போது பத்தாயிரம் ரூபாயாக அமலுக்கு வருகிறது.
  • குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 10,000 ஆக இருந்து வந்தது. தற்போது இந்த கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பத்தல் பதிவுத்துறை சேவை கட்டணமானது இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்