கடலூரில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு.!
கடலூரில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற விழாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
கடலூர் மாவட்டம் நல்லாதூர் பகுதியில் திமுக நிர்வாகி வீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் பங்கேற்று சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.
அந்த விழாவில் பங்கேற்பதற்காக அங்கு வந்த எம்எல்ஏ ஐயப்பன், விழா நடக்கும் வீட்டிற்குள் சென்ற ஒரு சில நிமிடங்களில் அங்கு சில மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உண்டானது.
அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் மற்ற யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.