அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 5.3 ஆக பதிவு.!
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கேம்ப்பெல் விரிகுடாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கிமீ தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.