மகளிர் உரிமைத் தொகை: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்.!

Stalin Meeting KV

மகளிர் உரிமைத் தொகை குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில், மகளிர் உரிமை தொகை திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பொது விநியோக கடைகளில் (ரேஷன் கடை) சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது என்று கடுமையாக சாடினார்.

தற்போது அதற்கு, இன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர். இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது, அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது என்றார்.

மேலும் அவர், பாஜக அறிவித்த ஏதாவது ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பிய அவர், பிரதமர் என்ற நிலையில் இருப்பதை மறந்து மோடி எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்