நடுவானில் திடீரென தீப்பற்றிய விமானம்: 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு.!
லாஸ் வேகாஸ் நகரில் இருந்து கலிபோர்னியாவுக்கு 6 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் தெற்கே உள்ள பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் ஒரு சிறிய கார்ப்பரேட் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது, இதில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மிரிடோ விமான நிலையம் அருகே உள்ள விளைநிலத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.