தக்காளி விலை மேலும் ரூ.10 உயர்வு.! அப்செட்டில் இல்லத்தரசிகள்…
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவிற்கு இன்று ரூ. 10 அதிகரிப்பு.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்றைய தினம் கிலோ ரூ.120க்கு விற்பனையான முதல் ரக தக்காளியின் விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து, ரூ.130க்கு விற்பனை ஆகிறது.
மேலும், சிறிய தக்காளி கிலோ ஒரு கிலோவுக்கு ரூ.20 குறைந்து, ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது .சில நாட்களாக ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது போக, குமரி மாவட்டத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளி விலை நேற்று சற்று குறைந்தது. நாகர்கோவிலில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.