மேற்கு வங்கம்: பஞ்சாயத்து தேர்தல் வன்முறையில் 18 பேர் பலி.!

West Benga election violence

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலின் போது, மாநிலம் முழுதும் வெடித்த வன்முறையால், 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், வாக்கு சாவடிகளை சேதம் செய்ததோடு,  தீ வைப்பு சம்பவம் என பலரை காயப்படுத்தியுள்ளனர்

தேர்தலின் பொது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான வாதத்தை உண்டாக்கியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் 3,341 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ பிற்பகல் 3 மணி வரை 50.52 சதவீத வாக்குகள் பதிவாகின.

டிஎம்சி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் மற்றும் அமைச்சர் சஷி பஞ்சா ஆகியோர் 14 மாவட்டங்களில் தேர்தல் அமைதியாக நடந்ததாகவும், மாநிலத்தின் 61,636 வாக்குச் சாவடிகளில் 60 இடங்களில் மட்டுமே வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்