சூடானில் பயங்கரம்…வான்வழி தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.!
சூடான் நாட்டில் ஓயாத தாக்குதல், 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரலில், அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே மோதல் வெடித்தது.
இந்நிலையில், சூடான் இராணுவத்திற்கும், விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே ஏற்பட்ட மோதல்களில் 500-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தற்போது, சூடான் நாட்டில் கர்தூம் அருகே குடியிருப்பு பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டதை அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (OCHA) அறிக்கையின்படி, ஏப்ரல் 15 முதல் 936,000 க்கும் அதிகமான மக்கள் மோதலால் புதிதாக இடம்பெயர்ந்துள்ளனர். இதில் சுமார் 736,200 உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் சுமார் 200,000 பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.