மின்மாற்றிகள் கொள்முதல்: முறைகேடு நடக்கவில்லை – மின்வாரியம் விளக்கம்.!

TNEB-TNGovt

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், மின்சார வாரியத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

எந்த நிலையிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. மின்வாரிய Cost Data-வில் உள்ள விலை ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்யும் காலத்திற்கு ஏற்ப திருத்தம் இல்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்பட்டன. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா, ராஜஸ்தானில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் கோப்புகளை பரிசீலித்ததில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது
தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நிறுவனங்கள் தந்த விலைப்புள்ளியை காட்டிலும் ரூ.50,000 வரை குறைப்பு செய்துதான் கொள்முதல் செய்யப்பட்டது என்று மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில் மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்