தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.!

IAS TN Govt

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு.

தமிழக அரசுத்துறைகளில் அவ்வப்போது பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ். பொதுத்துறை கூடுதல் செயலாளராக அதிகாரி சிவஞானம் ஐ.ஏ.எஸ். வருவாய் நிர்வாக ஆணையராக கலையரசன் ஐ.ஏ.எஸ். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ்.

உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி ஐ.ஏ.எஸ். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா ஐ.ஏ.எஸ். சமூக நலத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதவல்லி நியமனம்.

நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிகுமார் ஐ.ஏ.எஸ். ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன். பொதுத்துறை துணை செயலாளராக பத்மஜா ஐ.ஏ.எஸ் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்