மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் புகார்; மின்சாரவாரியம் விளக்கம்.!
மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், மின்சார வாரியத்தில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும் மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுகிறது. கோப்புகளை ஆய்வு செய்து பார்த்தபோது, நிறுவனங்கள் ஒரே விலைக்கு ஒப்பந்தத்தை கோரியுள்ளது தெரியவந்துள்ளது.
மின்வாரியத்திற்கு நிறுவனங்களின் ஒப்பந்த விலையை 50,000 வரை குறைவான விலைக்கு தான் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.