தமிழகத்தில் பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு.. ஜூலை 10 முதல் அமல் – தமிழக அரசு அறிவிப்பு

TNGovt

அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு ஜூலை 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அறிவிப்பு.

தமிழகத்தில் பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு ஜூலை 10-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000 லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1% ஆக உயர்கிறது என பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

செட்டில்மென்ட் பாகம், விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.1,000ஆக உயர்கிறது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.  பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்