பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க திட்டம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த அடிப்படை தகவல்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். மருத்துவ பரிசோதனை போன்ற தொடர் நடவடிக்கைக்காக உடல் சார்ந்த அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்ட உள்ளன.
பிறவிக்குறைபாடு, வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்டவற்றிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவரங்களை அதற்கான இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.