ராகுல்காந்தி குடும்பம் மேல எனக்கு வன்மம் இருக்கு – சீமான் பேட்டி

Seeman rahul

ராகுல் காந்தியின் தீர்ப்பினை அடுத்து அவரை தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து, ஜனநாயக படுகொலை என சீமான் கருத்து.

மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் அவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதை அடுத்து, ராகுல் எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார், மேலும் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் ராகுலுக்கு தண்டனையை ரத்து செய்யமுடியாது என வெளியானது. இந்த தீர்ப்பு வெளியானதை அடுத்து இதற்கு கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயகத்தின் மீதான படுகொலை என குறிப்பிட்டார். மேலும் கூறிய சீமான், ராகுல் மற்றும் அவரது குடும்பத்தின் மீது எனக்கு வன்மம் இருக்கிறது, அது வேறு விஷயம்.

ஆனால் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை எவ்வாறு தகுதி நீக்கம் செய்யலாம்? என்று கேள்வியெழுப்பிய அவர் தேர்தலில் மக்கள் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த அருண் ஜெட்லீயை நிதியமைச்சராக நியமித்தீர்கள். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை தகுதி நீக்கம் செய்கிறீர்கள், பிறகு தேர்தல் எதற்கு என்று சீமான் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்