பரபரப்பு…மனைவியை கொன்று மூளையை உணவில் வைத்து சாப்பிட்ட கணவன்.!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று மூளையை உணவுடன் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த 32 வயதான அல்வோரோ என்பவர், பேய், பிசாசு மீது நம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது.
அதாவது, கணவர் அல்வாரோ மற்றும் பாதிக்கப்பட்ட மரியா மான்செராட் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அல்வாரோ ஏற்கனவே திருமணம் ஆனவர். முன்னாள் மனைவியுடன் ஐந்து மகள்கள் உள்ளனராம்.
இந்நிலையில், அல்வாரோ கடந்த வாரம் சாத்தான் உத்தரவிட்டதாக கூறி, தனது மனைவியை கொன்று அவரது மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவரது மண்டை ஓட்டை சாம்பலாகப் பயன்படுத்தியதாகவும் அதோடு, உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் கொலை செய்த போது, போதையில் இருந்ததாக கூறுகின்றனர்.
போலீஸ் விசாரணை
மேலும் அந்த விசாரணையில், ஆல்வாரோ பேய் தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது வீட்டிலும் சூனியம் தொடர்பான சில பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இறுதியில் போதைப்பொருள் பழக்கத்தால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.