ரோப் கார் சேவை பாதிப்பு..சிக்கிய 75 பயணிகள்..! 10 மணிநேரத்திற்கு பிறகு மீட்பு..!

CableCaraffected

ஈக்வடாரில் ரோப் கார்களில் சிக்கிய 75 பயணிகள் 10 நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் அமைக்கப்பட்டுள்ள பிரபலமான சுற்றுலா ரோப் கார் தளம், உலகின் மிகப்பெரிய ரோப் கார் தளங்களில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 மீட்டர் (13,120 அடி) உயரம் வரை செல்லக்கூடியது.

இந்நிலையில், திடீரென அந்த ரோப் கார்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோப் கார் அமைப்பு முழுவதும் முடங்கியதால் அதில் பயணித்த 75 பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதன்பின், தீயணைப்பு மற்றும் காவல்துறைனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 10 மணி நேரமாக சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையின் கூட்டு முயற்சி மூலம் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக ரோப் கார் அமைப்பு முடங்கியதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்