கடும் வீழ்ச்சி.. பருத்தி கொள்முதலை உடனே துவங்க வேண்டும்.! பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்.!
கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி கொள்முதலை உடனே துவங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பருத்தி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதனால் பருத்தி கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பருத்தி விவசாயிகள் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிடவும்; பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) இனி வரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பருத்தி விவசாயிகள் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிடவும்; பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) இனி வரும் காலங்களில் ஜூன் 1… pic.twitter.com/nxIp9IN23I
— M.K.Stalin (@mkstalin) July 7, 2023