மாதம் ரூ.1000.! யாருக்கெல்லாம் கலைஞர் உரிமை தொகை கிடைக்கும்.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?

Tamilnadu CM MK Stalin

மாதம் ரூ.1000 வழங்கப்டும் கலைஞர் உரிமை தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் , யாருக்கெல்லாம் வழங்கப்படாது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் மிக முக்கியமான வாக்குறுதி என்னவென்றால் அது மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் எனும் அறிவிப்பு ஆகும். இந்த திட்டமானது எப்போது செயல்படுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

இது குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், காவல்த்துறை அதிகாரிகள் என பலருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் உரிய பயனாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்றும், அதில் யாரேனும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட வாரியாக முகாம்கள் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி பயனாளிகளை கண்டறியும் பொறுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தின் பயனாளர்களை கணக்கெடுக்க உட்படுத்தப்பட உள்ளனர். மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை பொது விநியோக கடைகளில் (ரேஷன் கடை) சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் உரிமை தொகை வழங்கப்பட மாட்டாது.?

  • பயனாளரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
  • பயன்பெறும் மகளிருக்கு ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்க கூடாது.
  • பெண் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மத்திய -மாநில, அரசு ஊழியர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படாது.
  • ஓய்வூதியதாரர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படாது.

யாருக்கெல்லாம் வழங்கப்படும்

  • மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • 2002 செப்டம்பர் 15க்குள் பிறந்து இருக்க வேண்டும்.
  • ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
  • ரேஷன் கடைகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று அதே நிரப்பி உரிமைத்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
  • ஒரு ரேஷன் கார்டுக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான முறையான அறிவிப்புகள் அவரவர் ரேஷன் கடைகளில் விரைவில் அறிவிக்கப்படும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்