கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு இருந்தார். இவர் இதற்கு முன்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயர் பதவியில் இருக்கும் காவல்துறை அதிகாரியின் தற்கொலை சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025