ஜெயிலர் படத்தின் “காவாலா” பாடல் வெளியீடு..செம குத்தாட்டம் ஆடும் தமன்னா.!

jailer movie

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா,மோகன்லால்,ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக முன்னதாக அறிவித்திருந்தது.

அதனை தொடர்ந்து அந்த பாடல் எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனையடுத்து, தற்போது அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடலில் வரும் இசையும், தமன்னாவின் நடனமும் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த பாடல்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்