அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்கு… சட்டத்துறை அமைச்சருக்கு ஆளுநர் விளக்கம்.!

GOVTn ravi

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் இசைவு கொடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு, தற்போது ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆகியோர் மீதான வழக்குகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் இதற்கு இசைவு கொடுக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Gov TN
Gov TN [Image – Twitter/@sunnews]

இந்த நிலையில் ஆளுநர் மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளில் சிபிஐ விசாரிக்கிறது என்பதால் சட்டப்படி இவைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. மேலும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த வழக்கிலும் மாநில அரசிடமிருந்து சம்மந்தப்பட்ட கோப்புகள் எதுவும் வரவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்