சற்று நேரத்தில் தீர்ப்பு.! ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வென்ற தேர்தல் செல்லுமா செல்லாதா.?

O.P.Ravindhranath ADMK MP

2019 தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியானது செல்லுமா செல்லதா என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு சுமார் 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார், அதிகார துஷ்பிரயோகம் செய்தார் எனவே தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என தேனி தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓபி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு மிலானி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் மனுதாரர், தேர்தல் அதிகாரிகள், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்