வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்..! ஐரோப்பாவில் டெலிவரிக்கு களமிறங்கிய ரோபோக்கள்..!

AutomatedRoboticVehicle

லித்துவேனியாவில் முதல் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் உள்ள லித்துவேனியாவில் முதல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாகனங்களை எஸ்டோனிய தானியங்கி வாகன உற்பத்தியாளரான கிளெவோன் (Clevon), லிதுவேனியாவின் முன்னணி டெலிவரி டிரான்ஸ்போர்ட் பிளாட்பார்ம் லாஸ்ட்மைல் (LastMile) மற்றும் மிகப்பெரிய சூப்பர்மார்கெட் கிளைகளை உடைய ஐகேஐ (IKI) உடன் இணைந்து பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளது.

இதில் முதற்கட்டமாக, லாஸ்ட்மைல் மூலம் இயக்கப்படும் மூன்று ரோபோ வாகனங்கள் வில்னியஸ் நகர மையப் பகுதியில் தினசரி தேவைப்படும் மளிகை பொருட்களை டெலிவரி செய்யும். இந்த வாகனங்கள் மிண்டாகாஸ் தெருவில் உள்ள ஐகேஐ கடையில் ஆர்டர்கள் சேகரித்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகவும் இலவசமாகவும் டெலிவரி செய்யும்.

இந்த பொருட்களை டெலிவரி செய்யும் வாகனங்களில், பெறப்படும் ஆர்டர்களுக்கு ஏற்ற பல்வேறு அளவுகளில் பாதுகாப்பான பெட்டிகளைக் கொண்டுள்ளன. இந்த வாகனத்தில் பல கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 98 அங்குல நீளம் மற்றும் 61 அங்குல உயரம் கொண்டது. இது அதிகபட்சமாக 16 mph வேகத்தில் பயணிக்கும். இந்த வாகனம் 4G இணைப்பு மூலம் எல்லா நேரங்களிலும் ரிமோட் டெலி ஆபரேட்டர்களால் கண்காணிக்கப்படும்.

மேலும், இந்த ரோபோக்கள் டெலிவரி துறையில் எங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மையை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை நகர மையத்திலும், கடைகளுக்கு வர முடியாத சூழலிலும் கூட நேரடியாக வழங்கப்படும் என்று லாஸ்ட்மைலின் தலைமை நிர்வாக அதிகாரி தடாஸ் நோருசைடிஸ் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்