நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.
தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகாவிலும், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது.
மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இன்று போல நாளையும், கோவை, நீலகிரியில் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதுவும் , அடுத்தடுத்த நாட்களில் இந்த மழையின் அளவு குறைய உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், அதற்கடுத்து மழையின் அளவு குறையும் என கூறப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை,குமரி கடல், வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.