சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை.! உதவி செயற்பொறியாளரிடம் தீவிர விசாரணை.!
சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு, உதவி செயற்பொறியாளரை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நீர்வளத்துறை அலுவலகத்தில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று விடிய விடிய நடைபெற்ற சோதனையில் இறுதியில் அங்கு 2 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத தொகை கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீர்வளத்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்சஒழிப்புத்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.