தொடர் கனமழை: கேரளாவில் 11 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை எதிரொலியாக இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு, கொல்லம் திருச்சூர், ஆலப்புழா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூர், மலப்புரம் பகுதியில் கனமழையுடன் சூறாவளிக்காற்று வீசியதில் மரங்கள் மின்கம்பங்களில் விழுந்து பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.