தமிழக முதல்வரின் அரசியல் அனுபவம் பாதி கூட எடப்பாடியிடம் இல்லை.! அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்.!

Edapadi palanisamy and Minister EV Velu

முதலமைச்சருடன் ஒப்பிட்டால் எடப்பாடி பழனிசாமி 50% கூட அனுபவம் இல்லாதவர் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார். 

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், காவி உடை அணிந்தவர்கள் திமுகவின் எதிரிகள் அல்ல. மக்களுக்கு நல்லது செய்ததால் அவர்களும் எங்களுக்கு அவர்கள் நண்பர்கள் தான் எனவும், மதுரை உயர்நீதிமன்ற கிளை கலைஞர் போட்ட பிச்சை என பேசியிலிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.

இது குறித்து இன்று அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். நான் கூறிய ஒரு வார்த்தை பேசுபொருளாகி விட்டது அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார் . அடுத்து, தமிழக முதல்வர் உடன் ஒப்பிடும் பொது எடப்பாடி பழனிசாமிக்கு 50 சதவீதம் கூட அரசியல் அனுபவம் இருக்காது என விமர்சித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏவாக , சென்னை மேயகராக , சிறப்பாக செயல்பட்டவர்.கே கலைஞர் ஆட்சி காலத்தில் துணை முதல்வராக இருந்தவர். கலைஞர் ஆட்சி காலத்தில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டது.  இபிஎஸ் சொல்லும் குற்றசாட்டு உண்மயானது அல்ல. எதோ போகிற போக்கில் எதையோ சொல்கிறார் என விமர்சித்தார்.

மேலும், திராவிடம் என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது போல காட்சி படுத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் தான் அதிகமாக குடமுழுக்கு நடைபெற்றது. பாழடைந்த கோவில்கள் கூட தற்போது அமைச்சர் சேகர்பாபு மேற்பார்வையில் பழுதுபார்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்க முடியாது. கோவில்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை தமிழக முதல்வர் கட்டாயம் செய்வார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்