குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றம்.! விசாரணை அறிக்கையில் தகவல்.!

Raji gandhi hospital

குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றபட்டது என விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பெயரில் மருத்துவர்கள் குழு விசாரணை மேற்கொண்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தையின் கை அழுகியதாகவும், அதனால் தான் கையை அகற்ற வேண்டிய சூழல் நிலவியதாகவும் குழந்தையின் தயார் புகார் கூறியிருந்தார்

அதன்படி தற்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், குழந்தைக்கு ஒருவகை கிருமி பாதிப்பு ஏற்பட்டு அது மூளை தொற்றாக மாறியிருந்தது. அதன் காரணமாக தான் குழந்தையின் கை அழுகியது என மருத்துவ அறிக்கையில் தெரிவிட்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையின் உடலில் மருந்தை தவறான இடத்தில் போடவில்லை என்பது பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், குழந்தை உடலில் செலுத்திய மருந்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த 29ஆம் தேதி குழந்தையின் கை நிறம் மாறியுள்ளது. இதனை தாய் செவிலியர்களிடம் தெரிவித்தவுடன் உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.

பின்னர் 30ஆம் தேதி மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை ஆய்வு செய்துள்ளனர். அதற்கு பிறகு குழந்தையின் உயிரை காப்பாற்றவே அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் குழந்தையின் உயிரை காப்பாற்றினர் என விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்