கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெறவும் – ஜி.கே.வாசன்
தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் கர்நாடக அரசு காவிரி நதி மூலமாக 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது. மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சரை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சந்திக்க உள்ளார். இதனையடுத்து தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய காவிரி நீரை முறையாக காலத்தே பெறவும், தமிழக விவசாயிகளின் தற்போதைய குருவைசாகுபடி நடைபெறவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.’ என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு #கர்நாடக அரசிடம் இருந்து பெற வேண்டிய #காவிரி நீரை முறையாக காலத்தே பெறவும், தமிழக #விவசாயிகளின் தற்போதைய #குறுவைசாகுபடி நடைபெறவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.#gkvasan #tmc #TNPolitics #CauveryRiver pic.twitter.com/Dke25ONJap
— G.K.Vasan (@GK__Vasan) July 5, 2023