TNPL 2023 Live: மதுரை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..! பிளேஆஃப் சுற்றிற்கு முன்னேறி அசத்தல்..!

MADURAI vs ITT Live

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27வது போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து, களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மதுரை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் 8 புள்ளிகளை பெற்று பிளேஆஃப் சுற்றிற்கு மதுரை அணி முன்னேறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்