விபத்தில் சிக்கிய ஷாருக்கான்.. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்!
படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியதால், சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் சிக்கிய அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் நடிகர் ஷாருக்கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டாகவும் கூறப்படுகிறது.
அதாவது, ஷாருக்கானுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதை அடுத்து ரத்தம் வரத் தொடங்கியது, உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வினோதமான விபத்து படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கவலைப்பட ஒன்றுமில்லை, ரத்தப்போக்கை நிறுத்த சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, SRK மூக்கில் கட்டு கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர், தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஷாருக்கான் கடைசியாக ‘பதான்’ படத்தில் நடித்தார், இது உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது.
அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் செப்டம்பரில் வெளியாகும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், மிகவும் வெற்றிகரமான இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘டன்கி’ படமும் ஷாருக்கிடம் உள்ளது, இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.