எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது” – கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது என டி.கே.சிவகுமார் பேட்டி.
கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருந்தார். அதில், கர்நாடகா அரசின் நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நதிநீர் பங்கீடு குறித்து புதிய தீர்ப்பாயத்தை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வரின் செயல்பாட்டுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது; தமிழர்கள் இங்கு வேலை செய்கின்றனர்; கன்னடர்கள் அங்கு வேலை செய்கின்றனர்; சந்தர்ப்பம் கிடைக்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.