ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிப்பு!

RahulGandhi

ராகுல் காந்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயரதிமன்றம் இடைக்கால தடை.

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு  எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மோடி பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி, அடுத்த விசாரணை ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடைபெறும் என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி ‘அனைத்து மோடிகளும் திருடர்கள்’ என்ற கருத்துக்காக பிரதீப் மோடி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனிடையே, குஜராத்தில் ஒரு தனி வழக்கில் ராகுல் காந்தி சட்டரீதியான விளைவுகளை சந்தித்துள்ளார். பிரதமர் மோடியின் குடும்பப் பெயரை பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும், அவரது வயநாடு மக்களவை உறுப்பினர்  பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy (2)
Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin