விசாரணை திருப்திகரமாக இருந்தது – கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா பேட்டி…!

ajisha

என் குழந்தையின் நிலைக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் அதுவரை நான் போராடுவேன் என அஜிஷா பேட்டி. 

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோர் தஸ்தஹீர் மீரான், அஜிஷா மருத்துவ குழு முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர் ஆகினார். இந்த விசாரணைக்கு பின் அஜிஸா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். 

அப்போது பேசிய அவர், என் குழந்தைக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை குழுவிடம் தெரிவித்தேன். மருத்துவர் மற்றும் செவிலியரின் அலட்சியத்தால் தான் என மகன் வலது கையை இழந்துள்ளான். எனது குழந்தையை குறை மாத குழந்தை என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதால் நான் உடைந்துவிட்டேன்.  விசாரணை திருப்திகரமாக இருந்தது, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 குழந்தைக்கு யார் ஊசி போட்டது என்ன விசாரணை கேள்வி கேட்டனர். என் குழந்தைக்கு நடந்தது போல் இனி எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என் குழந்தையின் நிலைக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் அதுவரை நான் போராடுவேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்