மோடி வாஷிங் பவுடர்.. ஊழல்வாதிகளின் கறைகளை அகற்ற உதவும்.! மூத்த வழக்கறிஞர் கிண்டல்.!

Modi Washing Powder

மோடி வாஷிங் பவுடர் ஊழல்வாதிகளின் கறைகளை அகற்றி அவர்களை அமைச்சர்களாக மாற்றும் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஊழல்வாதிகள் இருப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்துள்ளார். அவர் குறிப்பிடுகையில் மோடி வாஷிங் பவுடர் ஊழல்வாதிகளின் கறைகளை அகற்றி அவர்களை அமைச்சர்களாக மாற்ற உதவும் என தனது விமர்சனத்தை முன் வைத்தார்.

இதே போல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்,  பாஜக வாஷிங் மெஷின் அதன் சலவை பொருட்களான வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை (Incometax, CBI, ED) ஆகியவற்றுடன் மும்பையில் வேலை செய்து, தேசிய வாத காங்கிரஸ் பாஜகவால் அஜித் பவார் என இரு பிரிவுகளாக தூண்டானது என விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார். மேலும், ஜூன் 23 பாட்னா எதிர்க்கட்சிகூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அடுத்த கூட்டம் ஜூலை 17, 18இல் பெங்களூருவில் கூட்டப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்