செந்தில் பாலாஜி வழக்கு – தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்!
ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்.
அமைச்சர் செந்தில் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதில், ஒருவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமானது என கூறி, அவரை காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்தார். மற்றொருவர், விசாரணைக்கு ஏற்றதல்ல என தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி பரத சக்கவர்த்தி.
இரு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டனர். ஆட்கொணர்வு வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தீர்ப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர்.
இரு நீதிபதிகளில் ஒரு நீதிபதி எங்களுடையய கருத்தை முழுமையாக ஏற்று கொண்டுள்ளார். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்துள்ளார். செந்தில் பாலாஜி கைதில் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் அவரை உடனடியக விடுவிக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி உடல் நிலை சரியான பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுக்கலாம் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதே வேளையில் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளார். எனவே, தலைமை நீதிபதி அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் முடிவு அமையும் என்றும் மூன்றாவது நீதிபதி யார் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் எனவும் விளக்கமளித்தார். மேலும், கைது செய்யப்பட்ட பின்னர் 15 நாட்கள் கழித்து போலீஸ் காவலில் எடுக்க முடியாது என்பதுதான் எங்களது ஆணித்தரமான வாதம் வைத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.