ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் புதிய கர்டர்கள் பொருத்தும் பணி..!
ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் புதிய கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பாம்பன் ரயில் தண்டவாளத்தை 27 கர்டர்கள் தாங்கி நிற்கின்றன. கடல் அரிப்பால் அவை சேதம் அடைந்துள்ளதால் முதற்கட்டமாக 8 கோடி ரூபாய் செலவில் 10 கர்டர்கள் புதிதாக பொருத்தப்படுகின்றன.
ஒவ்வொன்றும் 15 டன் எடை கொண்டவை. அவற்றை டிராலி மூலம் எடுத்து வரும் ஊழியர்கள் பாம்பன் ரயில்வே பாலத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் காரணமாக திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் 30 ஆம் தேதி வரை பரமக்குடி வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.