மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை.! ரேஷன் கடையை நோக்கி மக்கள்..!!

Tomato prices

சென்னையில் தக்காளி விலை இன்று மீண்டும் சதமடித்தது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நேற்று தக்காளி கிலோ ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ரூ.10 உயர்ந்து கிலோவிற்கு ரூ. 130 முதல்  ரூ. 140க்கு விற்கப்படுகிறது.

தக்காளி, நேற்று கிலோ ரூ.95க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கிலோ ரூ.100ஐ எட்டியது. மொத்த விற்பனையில் 5 ரூபாய் அதிகரித்ததால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சென்னையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளியை விரைந்து வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரிய பெரியகருப்பன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி கொள்முதல் விலையான ரூ.60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவியத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்