மகாராஷ்டிர அரசியல் போல் கர்நாடகாவில் யார் அஜித் பவார் என காத்திருக்கிறேன்… குமாரசாமி.!

Kumarasami ka

மகாராஷ்டிர அரசியலில் நடந்தது போல் கர்நாடகாவில் யார் அந்த அஜித் பவார் என குமாரசாமி கேள்வி.

மகாராஷ்டிர அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம் கர்நாடாகாவில் எப்போது நடைபெறும் என தான் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த வாரம் எதிர்க்கட்சித்தலைவர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆளும் பாஜக-சிவசேனா கூட்டணியில் சில எம்.எல்.ஏக்களுடன் இணைந்தார்.

மேலும் என்சிபி யின் எம்.எல்.ஏக்கள் மற்றும் அஜித்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசியல் நெருக்கடி அண்டை மாநிலமான கர்நாடகாவில் சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறும்போது, கடந்த வார இறுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய அஜித் பவார், அவரது மாமா சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பலவீனப்படுத்திய பின், கர்நாடகாவில் என்ன நடக்குமோ என்று நான் பயப்படுகிறேன். எதிர்காலத்தில் கர்நாடகாவின் அஜித் பவார் போல் யாரை மாற்றுவார்கள் என்று காத்திருக்கிறோம் என்று குமாரசாமி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்