மேற்கு வங்கத்தில் கச்சா வெடிகுண்டு வெடிப்பு..! ஒருவர் பலி, மேலும் ஒருவர் காயம்..!
மேற்கு வங்கத்தில் கச்சா வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கிராமப்புற தேர்தல் நடைபெறும் இடத்தில் கச்சா வெடிகுண்டு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரோவா பகுதியில் உள்ள ஷாலிபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார் வெடி விபத்தில் காயமடைந்த இருவரும் பாசிர்ஹாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஜூலை 8 ஆம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைசம்பவங்கள் நிகழ்வதோடு பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.