பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.! இலங்கை முன்னாள் அதிபர் பரபரப்பு தகவல்.!

Sri Lanka Ex President Maithripala Sirisena

பிரபாகரன் மரணம் பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

இலங்கையில் தமிழகர்கள் வாழும் பகுதியின் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து போராடிய தமிழ் இயக்கங்களில் ஆயுதம் ஏந்தி போராட்ட களத்தில் மிக தீவிரமாக இயங்கிய மிக முக்கிய இயக்கம் பிரபாகரன் தலைமையினான விடுதலை புலிகள் இயக்கம் தான். 1983 ஜூலையில் துவங்கிய உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக தொடர்ந்தது.

அதன் பிறகு 2009இல் மே 18ஆம் தேதி விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த உள்நாட்டு போரில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழகர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா குற்றம் சாட்டி இருந்தது.

இந்த போரின் கடைசி காலத்தில் 2 மாத காலம் இடைக்கால பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா பொறுப்பில் இருந்தார். இவர் அதிபராக பொறுப்பில் இருந்த போது, நான் தான் போரை முன்னின்று நடத்தினேன். பிரபாகரனை வீழ்த்தியதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது. என அப்போது கூறியிருந்தார்.

ஆனால் அண்மையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் மைதிரிபால் சிறிசேனா கூறுகையில், நான் போர் இறுதிக்கட்ட சமயத்தில் தற்காலிகமாக பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தேன். பிரபாகரனுக்கு மரபணு சோதனை நடைபெற்றது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என குறிப்பிட்டு சிறிசேனா பேசியுள்ளார். இந்த கருத்தானது அவர் அதிபராக இருந்தபோது பேசியதற்கு நேர்மாறாக இருப்பதால் உலக அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகன் மரணம் மீதான கேள்விகளையும் சிறிசேனா பேட்டி எழுப்புகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்