தக்காளி விலை உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை.!
தக்காளி விலை ஒரு கிலோ 130 என உயர்ந்ததையடுத்து, அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
விலையை கட்டுபடுத்த ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என என தகவல் வெளியாகியுள்ளது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 120-க்கு விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.10 அதிகரித்து, 130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வியாபாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு:
சென்னை, கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதற்கு காரணம் வரத்து குறைவு என்பதால், விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.