உலகின் நம்பர் 1 அணியாக இருக்க முடியும்..’வெஸ்ட் இண்டீஸ்’ அணிக்கு ஆதரவாக கவுதம் கம்பீர் ட்வீட்…!
2 முறை உலகக்கோப்பை சாம்பியன் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதன்முறையாக இந்த ஆண்டு (2023)-க்கான ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடாமல் தகுதிச்சுற்று ஆட்டத்தோடு வெளியேறியது. சனிக்கிழமையன்று ஸ்காட்லாந்திற்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து மேற்கிந்திய தீவு அணி வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடாமல் தகுதிச்சுற்று ஆட்டத்தோடு வெளியேறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெளியேறியது குறித்து சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் ” வெஸ்ட் இண்டீஸ் அணியை எனக்கு மிகவும் பிடிக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டை நான் விரும்புகிறேன். இன்னும் அவர்கள் உலகின் நம்பர் 1 அணியாக இருக்க முடியும் என நம்புகிறேன்” என் கூறியுள்ளார்.
I love West Indies
I love West Indian cricket
I still believe they can be the No.1 team in world cricket!— Gautam Gambhir (@GautamGambhir) July 1, 2023