திருப்பதியில் இனி ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை – தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப் பரிவர்த்தனைக்கு பதில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கோவில்களில் சேவை டிக்கெட், பிரசாதம், பஞ்சகவ்ய பொருட்கள், டைரி, காலண்டர்கள் வாங்கும் பக்தர்களின் வசதிக்காக, போன் பே, ஜி பே, கியூஆர் கோடு ஸ்கேனர், டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.