SAFF 2023: லெபனானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..!
SAFF சாம்பியன்ஷிப் அரையிறுதியில் லெபனானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிப்பெற்றது.
இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் லெபனானுக்கு இடையேயான அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இரு அணிகளும் இறுதி வரை ஒருவருக்கொருவர் சளைக்காமல் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டும் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் லெபனானை வீழ்த்தியது. இந்தியாவுக்காக சுனில் சேத்ரி, மகேஷ் சிங், அன்வர் அலி மற்றும் உதாந்தா சிங் ஆகியோர் கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மேலும், ஜூலை 4ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, குவைத் அணிக்கு எதிராக மோதவுள்ளது. மேலும், இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்த முதல் அணி குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.