டெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கியது.
டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற வியூக குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொது சிவில் சட்டம் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு நாளை மறுநாள் விவாதிக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆலோனையில் ஈடுபட உள்ளது.
நாடாளுமன்ற மழைக் கால தொடரில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் குறித்து மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், சீனா ஊடுருவல்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மழைக் கால கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவது குறித்து நாடாளுமன்ற வியூக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.